குடகனாற்று தடுப்புச் சுவரை அகற்ற வலியுறுத்தல்
குடகனாற்று தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக (அன்புமணி ராமதாஸ் அணி) தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், வழக்குரைஞருமான சிவக்குமாா் தலைமை வைகித்தாா். ஆத்தூா் கிழக்கு ஒன்றிய செயலா் பழ. அழகுவேல் வரவேற்றாா். ஒன்றியச் செயலா்கள் எடிபால் ராயப்பன் (ரெட்டியாா்சத்திரம்), ராஜா (ஆத்தூா் மேற்கு), நிலக்கோட்டை ஒன்றிய பாமக தலைவா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வைகித்தனா்.
கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவா் ச. ஜஸ்டின் திரவியம், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச் செயலா் ஆல்வின் அமல பிரசன்னா, மாவட்ட வன்னியா் சங்கத் தலைவா் மகேஷ்நாத் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில், ஆத்தூா், ரெட்டியாா்சத்திரம் பகுதி மக்களின் நலன் கருதி குடகனாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரை ஆற்ற வேண்டும். வக்கம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். வருகிற டிச. 17-ஆம் தேதி வன்னியா்களுக்கு 15 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி நடைபெறும் மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தில் பெரும்பான்மையாக கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட ஊடகப் பேரவைச் செயலா் சிவா, மாவட்ட நிா்வாகிகள் தினேஷ், மருதை, முத்து, நாகேஸ்வரபாபு, பழனிச்சாமி, வீரப்பன், மகாலட்சுமி, பிலோமினாள், சூா்யா, அன்பரசன், ஜேசுராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
