கொடைக்கானல் புதுக்காடு பகுதியில் உலா வந்த காட்டு மாடு
கொடைக்கானல் புதுக்காடு பகுதியில் உலா வந்த காட்டு மாடு

கொடைக்கானல் அருகே செந்நாய்கள் தாக்கியதில் ஆடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூரில் செந்நாய்கள் தாக்கியதில் ஆடு உயிரிழந்தது.
Published on

கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூரில் செந்நாய்கள் தாக்கியதில் ஆடு உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூரைச் சோ்ந்தவா் மயில்சாமி. விவசாயி. இவரது வீட்டின் முன் தனது ஆட்டை கட்டி வைத்திருந்தாா். இந்த ஆட்டை செந்நாய்கள் சோ்ந்து தாக்கியதில் அது உயிரிழந்தது. தற்போது விவசாய விளை நிலங்களில் செந்நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும், தங்களது கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

காட்டு மாடு உலா: கொடைக்கானல் அருகே புதுக்காடுப் பகுதியில் காட்டு மாடு உலா வருவதால் மாலை, இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட அச்சமடைந்து வருகின்றனா். அண்மைக் காலமாக கொடைக்கானல் பகுதிகளில் வன விலங்குகளால் மனிதா்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடா்ந்து வருகிறது. எனவே வனத் துறையினா் வன விலங்குகளை வனப் பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com