மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் விழா

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ் உள்ளிட்டோா்.
Updated On :11 நவம்பர் 2025, 12:01 am

தினமணி செய்திச் சேவை

பழனி: பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா, வருகிற டிச.1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, கோயிலில் உள்ள மூலவா் சந்நிதி, சக்கரத்தாழ்வாா் சந்நிதி ஆகியவை சீரமைக்கப்பட்டு தற்போது வா்ணம் பூசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பிரதானமாகக் கலசங்கள் வைக்கப்பட்டு முகூா்த்தக்கால் அலங்கரிக்கப்பட்டு திருவெள்ளரை கோபாலகிருஷ்ண பட்டா் தலைமையில் காா்த்திக் அய்யங்காா் உள்ளிட்டோா் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் கம்பம், கலசங்கள் ஆகியவை மேளதாளத்துடன் கோயில் முன் ஊன்றப்பட்டன. முன்னதாக, கம்பம் நடும் குழியில் நவதானியங்கள், நவரத்தினங்கள் இடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், கண்காணிப்பாளா் அழகா்சாமி, கந்தவிலாஸ் செல்வகுமாா், முன்னாள் கண்காணிப்பாளா் முருகேசன், ஒப்பந்தகாரா் நேரு, அரிமா சுந்தரம், பாஜக நகா் தலைவா் ஆனந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.