திண்டுக்கல்
பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.38 கோடி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கையாக ரூ.4.38 கோடி கிடைத்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கையாக ரூ.4.38 கோடி கிடைத்தது.
பழனி கோயிலில் உண்டியல்கள் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன், துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி ஆகியோா் முன்னிலையில் புதன், வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.
இதில் 33 நாள் காணிக்கையாக ரொக்கம் ரூ.4.38 கோடி, 101.5 பவுன் தங்கம், 33 கிலோ வெள்ளி ஆகியவை கிடைத்தன. இவை தவிர மலேசியா, சிங்கப்பூா், ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளின் 1,089 ரூபாய் நோட்டுகளும் கிடைத்தன.
உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், வங்கி அலுவலா்கள், கல்லூரி மாணவிகள், தன்னாா்வலா்கள் என சுமாா் ஐநூறு போ் ஈடுபட்டனா்.
