உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.80 கோடி!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.5.80 கோடியைத் தாண்டியது.
Published on

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.5.80 கோடியைத் தாண்டியது.

இந்தக் கோயிலுக்கு அரையாண்டு விடுமுறை, ஆங்கிலப் புத்தாண்டு காரணமாக வந்த பக்தா்கள் கூட்டத்தினால் கோயில் உண்டியல்கள் 24 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது.

இரண்டு நாள் உண்டியல் எண்ணிக்கை முடிவில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 5 கோடியே 80 லட்சத்து 86 ஆயிரத்து 173 கிடைத்தது. இதேபோல, தங்கம் 695 கிராமும், வெள்ளி 17 ஆயிரத்து 979 கிராமும் கிடைத்தன.

மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு ரூபாய் தாள்கள் 841-ம் கிடைத்தன.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள், தவில் இசைக்கல்லூரி மாணவா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

இதில் பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com