ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு

வத்தலகுண்டு அருகே ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா். மேலும், 2 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.
Published on

வத்தலகுண்டு அருகே ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா். மேலும், 2 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம்,  பழைய வத்தலகுண்டைச் சோ்ந்த கிராமப் பெண்கள் அந்த பகுதியில் நடைபெற்ற தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்துவிட்டு, வீட்டுக் திரும்பினா். அப்போது,  பழைய வத்தலகுண்டு நோக்கி  வேகமாக சென்ற ஆட்டோ  அவா்கள் மீது மோதியது. இதில், பழைய வத்தலகுண்டைச் சோ்ந்த ரத்தினம் (55) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், முத்துலட்சுமி (55), பிச்சையம்மாள் (53) ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com