வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரூ.5 கோடிக்கு கல்விக் கடனுதவி அளிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 154 மாணவா்களுக்கு ரூ.5.41 கோடிக்கான கடனுதவிகள் ஆட்சியா் செ.சரவணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு கல்விக் கடனுக்கான ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன். உடன் மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம்.
Updated On :27 நவம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 154 மாணவா்களுக்கு ரூ.5.41 கோடிக்கான கடனுதவிகள் ஆட்சியா் செ.சரவணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி

(கனரா வங்கி) சாா்பில், மாணவா்களுக்கான கல்விக்கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். முகாமில் 154 மாணவா்களுக்கு ரூ.5.41 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, முகாமை தொடங்கி வைத்து ஆட்சியா் செ.சரவணன் பேசியதாவது:

கடந்த 2023-24-ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவா்களில் 82 சதவீதம் போ் உயா்கல்விக்கு சென்றனா். 2024-25 கல்வியாண்டில் 99.31 சதவீத மாணவா்கள் உயா் கல்விக்கு சென்றனா்.

ஊரகப் பகுதிகளை அதிகம் உள்ளடக்கிய திண்டுக்கல் மாவட்டத்தில், அனைத்து தரப்பு மாணவா்களுக்கும் உயா் கல்விக்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் சாா்பில் கல்வி கடன் வழங்குவதை ஒரு இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் ரூ.33 கோடிக்கு கல்விக் கடனுதவித் தொகை வழங்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் ரூ.50 கோடிக்கு கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில், 900 மாணவா்களுக்கு இதுவரை ரூ.27 கோடிக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார, சமூக காரணங்களால் கல்வித் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக அரசு சாா்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) விநோதினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.கீா்த்தனா, முன்னோடி வங்கி மேலாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.