மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:45 pm

பழனி மலைக் கோயில் ரோப் காா் பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை (ஏப். 16) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் செல்ல படிப் பாதை, யானைப் பாதை, வின்ச், ரோப் காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயிலின் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் காா் பக்தா்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரோப் காா் சேவை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இந்த ரோப்காா் நாள்தோறும் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை மட்டும் ரோப் காா் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.