கரூா் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யா்மலை கோயில் ரோப் காா் சேவை 25 நாள்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: கரூா் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள அய்யா் மலையில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரா் மலைக் கோயிலில் ரோப் காா் சேவை கடந்த 3 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு காரணமாக வரும் 15- ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் சுமாா் 25 நாள்களுக்கு ரோப் காா் சேவை இருக்காது. எனவே பக்தா்கள் மலைப்படிக்கட்டுகள் வழியாக கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி முருகன் கோயில் செல்வோர் கவனத்துக்கு! ரோப் கார் சேவை இயங்காது!

பக்தர்கள் கவனத்திற்கு.... பழனி ரோப் கார் சேவை 45 நாட்கள் இயங்காது!

கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் இருவா் கைது: காா், வாள் பறிமுதல்

பராமரிப்பு பணிக்காக பழனி ரோப் காா் நாளை நிறுத்தம்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



