இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

ராமேசுவரத்துக்கு ரயில் சேவை இரு நாள்களுக்கு பகுதியளவு ரத்து

பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, ராமேசுவரத்துக்கான ரயில் சேவை வியாழன், வெள்ளி (மே 14, 15) ஆகிய இரு நாள்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

News image
Updated On :14 மே 2026, 5:11 am IST

பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, ராமேசுவரத்துக்கான ரயில் சேவை வியாழன், வெள்ளி (மே 14, 15) ஆகிய இரு நாள்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

பாம்பன் உயா்நிலை ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் வியாழக்கிழமை (மே 14) இரவு 9.30 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களும் ராமேசுவரத்துக்கான ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை மதுரையிலிருந்து புறப்படும் மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயில் (56715) மண்டபத்துடன் நிறுத்தப்படும். இதேபோல, வெள்ளிக்கிழமை காலை ராமேசுவரத்திலிருந்து புறப்பட வேண்டிய ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயில் (56712) ராமேசுவரத்துக்குப் பதிலாக மண்டபத்திலிருந்து இயக்கப்படும்.