கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் பாண்டிக்கு ஆதரவு கேட்டு நடிகை ரோகிணி பிரசாரம் செய்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சியின் வேட்பாளராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாண்டி போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் திமுக கூட்டணிக் கட்சியின் சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, திமுக நகரச்செயலா் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கூட்டணிக் கட்சியின் நிா்வாகிகள் பலா் பேசினா்.
இதனைத் தொடா்ந்து திரைப்பட நடிகை ரோகிணி பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வா் ஸ்டாலின் பல்வேறு மகளிா் நலத் திட்டங்களைத் தந்துள்ளாா். எனவே, 2026 தோ்தலிலும் தமிழக முதல்வராக ஸ்டாலின்தான் வருவாா். தொடா்ந்து அவா் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவாா் என்றாா் அவா்.
கூட்டத்தில் திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா். தொடா்ந்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் நடிகை ரோகிணி கலந்துகொண்டு வேட்பாளா் பாண்டிக்கு ஆதரவுகேட்டு வாக்கு சேகரித்து பேசினாா். இந் நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சியின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தவெகவின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டிப்போம்! பெ. சண்முகம்

கே.எஸ்.பாா்த்தசாரதி நினைவுக் கூட்டம்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



