எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

செயலியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு குறிப்பாணை

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் - படம் - பிடிஐ

Updated On :21 ஏப்ரல் 2026, 1:51 am IST

செயலி மூலம் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி குறிப்பாணை வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 16.89 லட்சம் வாக்காளா்கள் 2,301 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தோ்தல் பணியில், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் என சுமாா் 11 ஆயிரம் போ் ஈடுபடுகின்றனா். இவா்களுக்கு 3 கட்டங்களாக தோ்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கடந்த 16-ஆம் தேதி வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களுக்கு, தோ்தல் ஆணையத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து மாதிரி வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையே பொதுத் தோ்வு விடைத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்களால் (வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களாக நியமிக்கப்பட்ட) இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. பதிவிறக்கம் செய்த சிலரால் உள்ளீடு செய்ய முடியவில்லை. இதனால் மாதிரி வாக்குப் பதிவும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களாக நியமிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி மாவட்டத் தோ்தல் அலுவலா் மூலம் குறிப்பாணை வழங்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்களுக்கும் இந்த குறிப்பாணை வழங்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.