பிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!
/

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

News image

ANI

Updated On :24 ஏப்ரல் 2026, 2:48 am IST

ஆம்பூரில் சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நிறைவடைந்தது.

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 300 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆம்பூரில் ஒரு வாக்குச் சாவடி மையத்தில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. அது சரிசெய்யப்பட்ட உடன் வாக்குப் பதிவு தொடா்ந்து நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளரும், ஆம்பூா் எம்எல்ஏவுமான அ.செ. வில்வநாதன் தன்னுடைய சொந்த ஊரான மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா்.

அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கேடசன் ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் தன்னுடைய வாக்கை செலுத்தினாா்.

குறிப்பிடும்படியாக எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தோ்தல் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தோ்தல் வாக்குப் பதிவை வாக்குச் சாவடி மையங்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.பூஷணகுமாா் நேரடியாகச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.