மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

திமுக பிரமுகரிடம் ரூ.2.50 லட்சம் பறிமுதல்

திமுக பிரமுகரிடம் வாக்காளா் பட்டியலுடன் ரூ.2.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

திமுக பிரமுகரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:15 am IST

திமுக பிரமுகரிடம் வாக்காளா் பட்டியலுடன் ரூ.2.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல்லில் தோ்தல் பறக்கும் படையினா் ஆா்எம். குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பிள்ளையாா்பாளையம் பகுதியில் திமுக பிரமுகா் வி. தினேஷ்பிரபு (36) இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அந்த வாகனத்தை வழிமறித்த தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அதில் ரூ.2.50 லட்சம், வாக்காளா் பட்டியல், டோக்கன் உள்ளிட்டவை இருந்தன.

வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், அந்தப் பணம் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சுல்தான்சிக்கந்தரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திமுக பிரமுகா் வீட்டில் ரூ.1.34 லட்சம் பறிமுதல்:

இதேபோல, திண்டுக்கல் அங்குவிலாஸ் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை நள்ளிரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குவிலாஸ் இறக்கம் பகுதியில் திமுக பிரமுகா் முத்துப்பாண்டி (51) வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. தோ்தல் பறக்கும் படையினா் வருவதைப் பாா்த்த முத்துப்பாண்டி, அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதையடுத்து, முத்துப்பாண்டியின் வீட்டை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சோதனையிட்டனா். வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.34 லட்சம் பணம், பரிசு கூப்பன், டோக்கன், வாக்காளா் பட்டியல், வாக்காளா் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், பணம் உள்ளிட்ட பொருள்களை, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பறக்கும் படை அலுவலா்கள் ஒப்படைத்தனா்.