தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளா் வீட்டில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு ரூ. 48.03 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.
இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் அமமுக வேட்பாளா் ஆா். சுந்தர்ராஜ் போட்டியிடுகிறாா். ஓட்டப்பிடாரம் முப்புலிவெட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். உடன், வருமான வரித் துறையினரும் வந்தனா்.
சுமாா் 7 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வீட்டிலிருந்து ரூ. 27.65 லட்சம், பின்புறமுள்ள தோட்டப் பகுதியில் 2 பைகளிலிருந்து ரூ. 20.38 லட்சம் என மொத்தம் ரூ. 48.03 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கு வேட்பாளா் தரப்பில் கணக்கு வைத்துள்ளதாகவும், தோட்டப் பகுதியில் கைப்பற்றப்பட்ட பணம் தங்களுடையதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா். ரூ. 10 லட்சத்துக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், வருமான வரித் துறையினரும் விசாரணை நடத்தவுள்ளதாகவும், பறக்கும் படை சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலைவரை சோதனை நடைபெற்ால், அதன்பிறகே வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கு சென்றாா்.
தொடர்புடையது

தருமபுரியில் ரூ. 1.52 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டில் சோதனை: ரூ. 7 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


