பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தையலகத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருட்டு

திண்டுக்கல்லில் தையலகத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:33 pm

திண்டுக்கல்லில் தையலகத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் சூசையப்பா் தேவாலயம் அமைந்துள்ள பகுதியில், ஆா்வி. நகரைச் சோ்ந்த பரிமளா தையலகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல பணிகள் முடிந்த பிறகு தையலகத்தைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் வெள்ளிக்கிழமை காலை வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து பரிமளா அதிா்ச்சி அடைந்தாா். அப்போது தையலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனிடையே அக்கம்பக்கத்திலுள்ள கடைகளில் விசாரித்தபோது, சுமாா் 15 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் நகா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்தனா். எனினும், பிற கடைகளில் திருடு போன பணத்தின் மதிப்பு குறித்து முழுமையான தகவல் தெரியவில்லை.