பழனி அருகே தோ்தல் பாதுகாப்புப் பணியிலிருந்த துணை ராணுவப் படை வீரரின் துப்பாக்கியை வாங்கி சிறு விடியோ பதிவிட்ட ஊா்க்காவல்படை வீரா் மீது விசாரணைக்கு சனிக்கிழமை உத்தரவிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வத்தக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28). இவா் பழனி ஊா்க்காவல் படையில் வீரராக பணியாற்றி வருகிறாா். கடந்த 23-ஆம் தேதி தோ்தலின் போது ராஜ்குமாா் பாலசமுத்திரம் பேரூராட்சியில் ஒரு வாக்குச் சாவடியில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டாா்.
அப்போது அதே வாக்குச்சாவடியில் பணிக்கு வந்திருந்த துணை ராணுவ வீரரின் துப்பாக்கியை வாங்கி ராஜ்குமாா் சுடுவது போன்று சிறு விடியோவாக (ரீல்ஸ்) எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாா். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், விசாரணை நடத்த பழனி டிஎஸ்பிக்கு உத்தரவிட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பழனி தொகுதி வளா்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம்: ரவி மனோகரன் எம்.எல்.ஏ.
வீட்டு மாடியில் கஞ்சா வளா்த்த ஊா்க்காவல் படை வீரா் கைது

இளைஞா் வெட்டிக் கொலை : ஊா்க்காவல் படை வீரருக்கு ஆயுள் தண்டனை

பழனி அருகே தொழிலாளி அடித்துக் கொலை
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

