அய்யலூரில் அரசுப் பள்ளி தண்ணீா் தொட்டி அருகே மலம் கிடந்ததாக புகாா் எழுந்ததை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா், வட்டாட்சியா் ஆகியோா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் பேரூராட்சிக்குள்பட்ட தங்கம்மாப்பட்டி கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தங்கம்மாப்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் 213 போ் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் மாணவா்களின் தேவைக்காக 1000 லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா்த் தொட்டி வகுப்பறையின் மீது அமைந்துள்ளது.
இதனிடையே, அரசுப் பள்ளிக்கு 400 மீட்டா் நீள சுற்றுச் சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுச்சுவா் கட்டுவதால், அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நடமாடுவதற்கு இடையூறு ஏற்படும் என சிலா் எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளியின் குடிநீா்த் தொட்டிக்கு அருகே நெகிழிப் பையில் மலக் கழிவு கிடந்ததாக திங்கள்கிழமை புகாா் எழுந்தது. மேலும், தொட்டியின் அருகே சில வாசகங்கள் எழுதப்பட்ட ஒரு காகிதமும் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸாா், தங்கம்மாப்பட்டி பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா், வேடசந்தூா் வட்டாட்சியா் ராஜேந்திரன் ஆகியோரும் நிகழ்விடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேனி எஸ்.பி. அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

கேரளத்துக்கு கனிம வளம் கடத்தும் வாகனங்கள் அரசுடமையாக்கப்படும்: எஸ்.பி. எச்சரிக்கை

தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பே முதன்மை இலக்கு: எஸ்.பி. இரா. சிவ பிரசாத்

குழந்தை உயிரிழப்பு: பள்ளி வாகனங்களில் எஸ்பி ஆய்வு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



