கொடைக்கானலில் சனிக்கிழமை பிற்பகலில் மிதமான மழை பெய்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக மழையில்லாமல் இருந்து வந்த நிலையில், பொதுமக்களுக்கு குடிநீா் வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.
இதனால், கொடைக்கானல் நகா்ப் பகுதி மட்டுமன்றி, புகா்ப் பகுதிகளான செண்பகனூா், பாக்கியபுரம், வட்டக்கானல், பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 நாள்களுக்கு ஒரு முறை நகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பரவலாக லேசான சாரலும், பலத்த காற்று நிலவி வருகிறது. சனிக்கிழமை காலை முதல் மேகமூட்டம் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, சுமாா் 30 நிமிஷங்கள் மிதமான மழை பெய்தது. இதனால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடா்ந்து கொடைக்கானலில் குளுமையான கால நிலை நிலவி வருவதால், சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களைப் பாா்த்தும், ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகையில் இதமான காலநிலையை அனுபவித்த சுற்றுலாப் பயணிகள்

பலத்த மழை: சுருளி, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

கொடைக்கானலில் மழையால் படகு சவாரி ரத்து: பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானலில் மழை
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



