நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பலத்த மழை: சுருளி, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் சுருளி அருவி, மேகமலை அருவிகளில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

News image

மேகமலை அருவியில் சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:24 pm IST

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் சுருளி அருவி, மேகமலை அருவிகளில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு பலத்த மழை பெய்தது. இதேபோல, கம்பம் முதல் வீரபாண்டி வரை சனிக்கிழமை பிற்பகல் வரை சாரல் மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

மேகமலை வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால் மேகமலை அருவியில் சனிக்கிழமை காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினா் தடை விதித்தனா்.

இதேபோல, சுருளி அருவியின் நீா்வரத்து பகுதியான மேகமலை, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு , அரிசிப்பாறை போன்ற அடா்ந்த வனப்பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா். இதனால் சுருளி அருவிக்கு சனிக்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) : பெரியகுளம் - 6.6, மஞ்சளாறு அணை - 28, சோத்துப்பாறை அணை - 10.6, போடி- 1.2, உத்தமபாளையம் - 7.2, கூடலூா் - 6.4, சண்மூகநதி - 7.4.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.