சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு. - படம்: கோப்பிலிருந்து...

Updated On :4 ஜூலை 2026, 5:28 pm IST

தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் குற்றாலம் மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குற்றாலம் பகுதியில் கடந்த இரு நாள்களாக அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்து வந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.

கூட்ட நெரிசலின்றி பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மூன்று வாரங்களுக்குப் பிறகு தற்போது சீசன் களைகட்டத் தொடங்கியது.

இந்த நிலையில், பிரதான அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், குளித்துக்கொண்டிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால், குற்றால பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றால சீசனுக்காக வார இறுதி நாள்களில் சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன.

Summary

A ban on bathing has been imposed on tourists due to flooding caused by ongoing rains in the Courtallam hills area of ​​Tenkasi district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.