டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தொடா் மழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐந்தருவியில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

Tourists banned from bathing

குற்றாலம் ஐந்தருவியில் ஆா்ப்பரிக்கும் தண்ணீா். - டிஎன்எஸ்

Published On :

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் சாரல் மழைக் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் சீசன் தொடங்கியது முதல் சாரல் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

குற்றாலம் பேரருவியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

பழைய குற்றாலம் அருவியில் நீா்வரத்து அதிகமாக உள்ளதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து 4-ஆவது நாளாக புதன்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடா் மழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐந்தருவியில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

பழைய குற்றலாம், சிற்றருவி, புலியருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

Summary

Flash floods in Courtallam waterfalls: Tourists banned from bathing

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.