உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

பழனி நில மோசடி வழக்கில் கைதானவர் சிறையில் மரணம்!

பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நில மோசடி வழக்கில் கைதானவர் உயிரிழந்தது பற்றி..

News image

நில மோசடி வழக்கில் கைதானவர் மரணம் - file photo

Updated On :8 ஆகஸ்ட் 2026, 2:49 pm IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்கைத் திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், வழக்குரைஞர் அன்வர்தீன், சேதுபதி, ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் முருகதாஸ், அன்வர்தீன், சேதுபதி ஆகிய 3 பேரிடமும் நீதிமன்ற உத்தரவுப்படி 3 நாள்கள் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி நேற்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது மூவரும் இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். ஆனால் மூவரின் ஜாமின் மனுவைத் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து ஆகஸ்ட் 21 தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர்.

இதனையடுத்து மூவரும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் வழக்குரைஞர் அன்வர்தீனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கைதி சிறையில் உயிரிழந்தது தொடர்பாக கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விசாரணை கைதி மரணமடைந்து குறித்து நீதிபதி ராஜபிரபு ஜி.ஹச்சில் ஆய்வு செய்தார்.

The Dindigul CB-CID police are investigating a case involving the registration—using forged documents-of 1.40 acres of land worth ₹100 crore belonging to the Palani Murugan Temple in Dindigul district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.