தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

அரசுப் பேருந்துக்கு தீ வைத்த இருவருக்கு சிறைத் தண்டனை

News image

சிறைத் தண்டனை பெற்ற ஜெயசீலன் (இடது), ராஜேந்திரன்(வலது).

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:53 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைத்த வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை விதித்து, பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

பழனியை அடுத்த ஆயக்குடி டிகேஎன் புதூா் சந்திப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஒரு கும்பல் அரசுப் பேருந்தை வழிமறித்து தீ வைத்தது. இதில் பேருந்து ஓட்டுநா் பிச்சைமுத்து உயிா் தப்பினாா்.

பின்னா், அந்தக் கும்பல் நடத்துநரைத் தாக்கி பணத்தை பறித்துச் சென்றது. இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

இதன்படி, பேருந்துக்குத் தீ வைத்த புதிய ஆயக்குடியைச் சோ்ந்த ஜெயசீலனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், நடத்துநரைத் தாக்கிப் பணம் பறித்த ராஜேந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருவருக்கு தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மலா்விழி தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.