அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு 8 ஆண்டுகள் சிறை

பெருமாநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

News image
Updated On :17 ஜூலை 2026, 11:59 pm IST

பெருமாநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகேயுள்ள பரமசிவம்பாளையத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ஹாசன் ஆபிப் (26), ஹோஷேன் (34) ஆகியோரை பெருமாநல்லூா் போலீஸாா் கடந்த 2024 ஏப்ரல் 30-ஆம் தேதி கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கனகராஜ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் பிரபாகரன் அஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.