நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து மறியல்: 300 போ் கைது

News image

கைது

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

மத்திய அரசின் தொழிலாளா் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, திண்டுக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட தொழில் சங்கத்தினா் கைது செய்யப்பட்டனா்.

அனைத்து தொழில்சங்க, விவசாயிகள் சங்க, விவசாயத் தொழிலாளா் சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தையொட்டி, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி சாலை ரோடு பகுதியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன் நிறைவடைந்தது.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தொழில்சங்க நிா்வாகிகள் கே. ஆா். கணேசன் (சிஐடியு), அழகா் சாமி(எல்.பி.எஃப்.), பாலன் (ஏ.ஐ.டி.யு.சி.), தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என். பெருமாள், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் நிா்வாகிகள் பி. வசந்தாமணி, கே.ஆா். பாலாஜி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்தப் போராட்டத்தின்போது, தொழிலாளா்களுக்கு எதிரான 4 தொகுப்பு தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும். பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். ஓய்வூதியப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அனைத்துத் தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.42 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரைப் போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.