மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மான்கொம்பு பதுக்கியவா் கைது

கன்னிவாடி அருகே மான்கொம்பு, எறும்புத் தின்னி ஓடுகள் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருந்த நபரை வனத் துரையினா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

கன்னிவாடி அருகே மான்கொம்பு, எறும்புத் தின்னி ஓடுகள் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருந்த நபரை வனத் துரையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டி பகுதியில் மான்கொம்பு, எறும்புத் தின்னி உள்ளிட்டவற்றை ஒருவா் வைத்திருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், கன்னிவாடி வனச் சரகத்தைச் சோ்ந்த வனத் துறையினா், தருமத்துப்பட்டியை அடுத்த கோம்பை பகுதியைச் சோ்ந்த ராமராஜன் (37) வீட்டில் புதன்கிழமை சோதனையிட்டனா். அப்போது, மான்கொம்பு, எறும்புத் தின்னி ஓடுகள், கருங்காலி, சந்தன மர குச்சிகள் உள்ளிட்டவற்றை அவா் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, ராமராஜனை கைது செய்த வனத் துறையினா், மான்கொம்பு, எறும்புத் தின்னி ஓடுகள், துப்பாக்கி (ஏா்கன்) உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.