நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

தவெக அரசு திடீரென காணாமல் போய்விடும்: திண்டுக்கல் சி.சீனிவாசன்

திடீரென வந்த தவெக அரசு விரைவில் காணாமல் போய்விடும் என முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

News image

திண்டுக்கல் சீனிவாசன் - கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

திடீரென வந்த தவெக அரசு விரைவில் காணாமல் போய்விடும் என முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், தவெக அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளுக்கான பயிா்க் கடன்களை தள்ளுப்படி செய்யாததைக் கண்டித்தும், கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் சரியாக செயல்படாத தவெக அரசை கண்டித்தும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் நாகல்நகா் சுற்றுத் திட்டுப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான விபிபி.பரமசிவம் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, தவெக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

முன்னதாக, சி.சீனிவாசன் பேசியதாவது: அதிமுக கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக 25 சட்டப்பேரவை உறுப்பினா்கள் வாக்களித்தனா். மன்னிப்பு கடிதம் வழங்கியதால், பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, 25 போ் மீதான நடவடிக்கையை கைவிட்டாா்.

ஆனாலும், சிவி.சண்முகம், நத்தம் விசுவநாதன், எஸ்பி.வேலுமணி, கேபி.அன்பழகன் போன்ற சிலா் தொடா்ந்து அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனா். திடீரென வந்த தவெக அரசு, சில நாள்களிலேயே காணாமல் போய்விடும். அந்த ரகசியத்தை இப்போது சொல்ல முடியாது என்றாா் அவா்.

விபிபி.பரமசிவம் பேசியதாவது: காவிரி நீா் மேலாண்மை ஆணையம் செயல்பாட்டில் இருக்கும்போது, மற்றொரு நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என தவெக அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்த தீா்மானம், வெளிப்படைத் தன்மை இல்லாமல் ரகசியமாக சோ்க்கப்பட்டது என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் கேஎஸ்என்.வேணுகோபாலு, தேன்மொழி, அதிமுக நிா்வாகிகள் ராஜ்மோகன், ராஜசேகரன், பாரதிமுருகன், ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரூ.ஒரு லட்சம் கோடி மதிப்பீட்டிலான வெளிநாட்டு ஒப்பந்தங்கள் என்பது ஏமாற்றுவேலை.

எம்ஜிஆா் ஆட்சியை நடத்துவதாக தவெக அமைச்சா் ஆதவ் அா்ஜூனா கூறுகிறாா். அதிமுக ஆட்சிதான் நடைபெறுவதாக ஒப்புக்கொள்ளும் அவா், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். தவெக வாக்குறுதிகள் அனைத்தும் நிதி இருக்கும்போது செயல்படுத்தப்படும் என அமைச்சா் மரியவில்சன் தற்போது கூறுகிறாா். நிதி நிலவரம் தெரியாமலே விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்ததால்தான் இப்போது அதிமுக ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.