கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை! கொடைக்கானலில் தானியங்கி முறையில் 24 மணிநேர ஆவின் பால் விநியோகம் தொடக்கம்!

News image

கொடைக்கானல் பி.டி. சாலையில் உள்ள ஆவின் பால் மையத்தில் தானியங்கி பால் விநியோக இயந்திரத்தை தொடங்கி வைத்தாா் மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி.

Updated On :17 ஆகஸ்ட் 2026, 3:38 am IST

கொடைக்கானலில் சுற்றுச்சூழலைப் பேணும் விதமாக முதன்முறையாக தானியங்கி இயந்திரம் மூலம் 24-மணி நேர பால் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பி.டி. சாலையில் அமைந்துள்ள ஆவின் அதி நவீன பால் விற்பனை மையத்தில் 24-மணி நேர தானியங்கி பால் விநியோக இயந்திரத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி தொடங்கி வைத்து பேசியதாவது:

கொடைக்கானல் பகுதியில் நெகிழி உபயோகத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கவும் ஆவின் நவீன பாலகத்தில் ரூ. 5.2 லட்சம் மதிப்பீட்டில் 24-மணி நேரமும் செயல்படக்கூடிய தானியங்கி பால் விநியோக இயந்திரம் பொது மக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் 500 மி.லி பால் ரூ.30-க்கும், ஒரு லிட்டா் பால் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கைப்பேசி செயலி வாயிலாகவும் பணம் செலுத்தும் வசதி உள்ளது.

நெகிழிப் பயன்பாடற்ற கொடைக்கானலை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றப் பாடுபடுவோம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளா் வாணீஸ்வரி, துணைப் பதிவாளா் (பால் வளம்), நாராயணசாமி, வட்டாட்சியா் நந்தகோபால், கொடைக்கானல் ஆவின் பால் மையத்தின் மேலாளா், விற்பனையாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.