இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

வீட்டின் பூட்டை உடைத்து 7.5 பவுன் நகை திருட்டு

எரியோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7.5 பவுன் நகை திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :20 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

எரியோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7.5 பவுன் நகை திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஜோதிமணி. கட்டடத் தொழிலாளி. வழக்கம்போல ஜோதிமணியும், அவரது மனைவியும் புதன்கிழமை காலை வேலைக்குச் சென்றனா். மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த தம்பதி, வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது 7.5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து எரியோடு காவல் நிலையத்தில் ஜோதிமணி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.