தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை நடமாட்டம்

ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூா் செல்லும் சாலையில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

புலிக்குத்திக்காடு பகுதியில் நடமாடிய ஒற்றை யானை.

Published On :

ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூா் செல்லும் சாலையில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திலிருந்து பாச்சலூா் செல்லும் சாலையில், பரப்பலாறு அணை முதல் பாச்சலூா் வரை பெரும்பாலும் தோட்டங்கள் அமைந்திருப்பதால், விவசாயப் பணிகளுக்காக பொதுமக்கள் சென்று வருகின்றனா். இந்த நிலையில், பகல் நேரத்திலேயே புலிக்குத்திக்காடு பகுதியில் சாலையோரமாக ஒற்றை யானை வியாழக்கிழமை நடமாடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானையைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இந்தத் தகவல் அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும் பரவியது. ஒற்றை யானை சுற்றுவதால் விவசாயிகள் மட்டுமன்றி, தோட்டங்களில் குடியிருக்கும் பொதுமக்களும் அச்சமடைந்தனா். குறிப்பாக அதிகாலை, மாலை நேரங்களில் பாச்சலூா் மலைச் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தினா்.

யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், குடியிருப்பு, விவசாயத் தோட்டங்களுக்கு அருகே யானைகளை வர விடாமல் வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கும் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.