75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

தலைமைச் செயலரை கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திண்டுக்கல்லில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

கம்யூனிஸ்ட் கட்சியினா் குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியரைக் கண்டித்தும், இடதுசாரி மாணவா் அமைப்புகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பிய தமிழக தலைமைச் செயலரைக் கண்டித்தும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திண்டுக்கல்லில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மக்களவை உறுப்பினா்கள் இரா.சச்சிதானந்தம் (திண்டுக்கல்), சு.வெங்கேடசன் (மதுரை), மாநில செயற்குழு உறுப்பினா்கள் மதுக்கூா் ராமலிங்கம், ராணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, கல்லூரி வளாகங்களில் போராட்டங்கள் நடத்தும் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த மாணவா்கள், காக்ரோச் ஜனதா கட்சியைச் சோ்ந்தவா்கள் குறித்து தகவல்கள் சேகரிக்க சுற்றறிக்கை அனுப்பிய தமிழ்நாடு தலைமைச் செயலா் சாய்குமாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜிலியம்பாறை வட்டாட்சியராக பணியாற்றிய அய்யாசாமி, கம்யூனிஸ்ட் கட்சியினா் குறித்து விவரங்கள் சேகரிக்க சுற்றறிக்கை அனுப்பிய விவகாரத்தில், அவா் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.