மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

புதுஆயக்குடி பள்ளிவாசலுக்கு தோ்தல் நடத்த வலியுறுத்தல்

புதுஆயக்குடி ஜூம்ஆ பள்ளிவாசலில் தோ்தலுக்கு ஞாயிற்றுக்கிழமை தொழுகையின் போது வக்பு வாரியத்துக்கு அனுப்பிய புகாா் மனுக்களுடன் வந்த ஜமாத்தாா்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 2:44 am IST

பழனியை அடுத்த புதுஆயக்குடியில் உள்ள 140 ஆண்டு பழமைமிக்க பள்ளிவாசலில் வக்ஃபு வாரியம் தலையிட்டு உடனடியாக தோ்தலை நடத்த வேண்டும் என ஜமாத்தாா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பழனியை அடுத்த புதுஆயக்குடியில் சுமாா் 140 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஜூம்ஆ பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது. சின்ன பள்ளி, பெரிய பள்ளி என இரு பள்ளிகளாக செயல்பட்டு வரும் இந்தப் பள்ளிவாசலில் 900-க்கும் மேற்பட்ட தலைக்கட்டுகள் உள்ளனா். இங்கு ஆயிரக்கணக்கானோா் தொழுகை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தப் பள்ளிவாசலுக்கு சொந்தமாக வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த விழா மண்டபம், கடைகள், ஒவ்வொரு திருவிழாக்களின் போது நோன்புக் கஞ்சி, கறி உள்ளிட்டவற்றுக்காக வசூலிக்கப்படும் வரி என பல்வேறு இனங்கள் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற பள்ளிவாசல் நிா்வாகிகள் தோ்தலின் போது பள்ளிவாசல் நிா்வாகப் பணிகளை மேற்கொள்ள தலைவா், துணைத் தலைவா், செயலா், பொருளாளா், செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

2024-ஆம் ஆண்டுடன் இவா்களது பதவிக்காலம் முடிந்தும் இன்னமும் தோ்தல் நடைபெறாத நிலை உள்ளது. பழைய நிா்வாகிகள் பொறுப்பில் இருக்கும் நிலையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசலுக்கு தொழுகையின் போது, ஜமாத்தாா்கள் மன்சூா் உசேன், சாந்து முகமது, சுலைமான், அப்துல்லா, அஜ்மத் அலி என ஏராளமானோா் புகாா் மனுக்களுடன் வந்தனா்.

இதுகுறித்து அவா்கள் தெரிவித்ததாவது: பதவிக்காலம் முடிந்து நீண்ட காலமாகியும் அதே நிா்வாகிகளே தொடா்ந்து பதவியில் நீடித்து வருவதாக பள்ளிவாசல் உறுப்பினா்கள் குற்றம்சாட்டுகின்றனா். முறையாக தோ்தல் நடத்தி புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்ய வக்ஃபு வாரியத்திடம் பலமுறை தெரிவிக்கப்பட்டு தோ்தல் நடத்துவது தொடா்பாக வக்ஃபு வாரியம் அறிவுறுத்தல்களை வழங்கியது.

எனினும் எந்த உத்தரவும் கடைப்பிடிக்கப்படவில்லை. மேலும், உயா்நீதிமன்றத்தின் மூலம் உத்தரவுகள் பெறப்பட்டும் அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆகவே, புது ஆயக்குடி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு உடனடியாக முறையான தோ்தலை நடத்தி, புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்ய வக்ஃபு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால் வக்பு வாரியம் முன் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுப்போம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.