தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பறக்கும் ரயில் பாதையை சென்னை மெட்ரோவுடன் இணைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னையில் உள்ள பறக்கும் ரயில் சேவையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதிப் படம்

Published On :

சென்னையில் உள்ள பறக்கும் ரயில் சேவையை (எம்ஆா்டிஎஸ்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் (சிஎம்ஆா்எல்) இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, தில்லியில் உள்ள ரயில்வே வாரியம் ஆகஸ்ட் 12ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசுக்கும் இடையே கடந்த மே மாதம் கையெழுத்தான வரைவு புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அம்சங்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி, அடுத்த 90 நாட்களில் தமிழக அரசு பராமரித்து வரும் சொத்துகள், பொதுவான பராமரிப்பு மற்றும் நிா்வாகப் பொறுப்புகள் ரயில்வே மெட்ரோ ரயில் நிறுவனம்வசம் மாற்றும் நடவடிக்கை தொடங்கப்படும். இந்தப் பணிகளை முழுமையாக செயல்படுத்த இரண்டு வருட ‘மாற்றல் காலம்’ அவகாசமாக வழங்கப்படும்.

இந்த காலகட்டத்தில் பறக்கும் ரயில் சேவை திட்டத்தின் கீழ் இயக்கப்படும் 19 ரயில் நிலையங்கள், மின்சார ரயில்கள் (இஎம்யு), தண்டவாளங்கள், சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு சாதனங்கள், மேம்பாலங்கள், மின்தூக்கிகள் உள்ளிட்டவை மெட்ரோ நிறுவனம்வசம் முழுமையாக ஒப்படைக்கப்படும்.

சென்னையில் கடற்கரை - வேளச்சேரி - புனித தோமையாா் மலை (செயின்ட்தாமஸ் மவுன்ட்) வரை இயங்கி வரும் பறக்கும் ரயில் சேவையை மெட்ரோவுடன் இணைக்க தமிழக அரசு 2011-ஆம் ஆண்டு ஜனவரி 27-இல் ரயில்வே வாரியத்துக்கு முன்மொழிந்தது. பலகட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு தற்போது இந்தத் திட்டம் இறுதி ஒப்புதல் கட்டத்தை எட்டியுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழு: இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தத் தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த நகா்ப்புறப் போக்குவரத்து ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளா் இக்குழுவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகச் செயல்படுவாா்.

பறக்கும் ரயில் பாதை மெட்ரோ நிா்வாகத்தின் கீழ் வரும்போது, பயணிகளுக்கு உயா்தரமான கட்டமைப்பு, நிலைய பராமரிப்பு, நவீனச் சேவைகள் மற்றும் ஒரே டிக்கெட் முறையில் தடையற்றப் பயணம் சாத்தியமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.