
ஆடுதுறை-கும்பகோணம்-சுந்தரபெருமாள் கோயில் ரயில் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்ற ரயில்வே ஒப்புதல்: இணையமைச்சர் எல். முருகன்
ஆடுதுறை-கும்பகோணம்-சுந்தரபெருமாள் கோயில் ரயில் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது தொடர்பாக...

மத்திய இணையமைச்சர் எல். முருகன் - டிஎன்எஸ்
ஆடுதுறை-கும்பகோணம்-சுந்தரபெருமாள் கோயில் ரயில் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்ற ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன், இந்த திட்டம் பயணிகளின் வசதியை மேம்படுத்தி, பிராந்திய இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என கூறியுள்ளார்.
ஆடுதுறை - கும்பகோணம் - சுந்தரபெருமாள் கோவில் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், பிரதமருக்கும் ரயில்வே அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான தமது கோரிக்கையை ஏற்று, ஆடுதுறை - கும்பகோணம் - சுந்தரபெருமாள் கோயில் இடையிலான ஒற்றை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்றும் பணிக்கு ஒப்புதல் அளித்தமைக்காக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Railways approves doubling of the Aduthurai-Kumbakonam-Sundaraperumal Kovil railway line: Minister of State L. Murugan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







