16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்: எல். முருகன்

முதல்வர் விஜய் தனது வெளிநாட்டு பயணம் பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

எல். முருகன்

Published On :

முதல்வர் விஜய் தனது வெளிநாட்டு பயணம் பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படும் வரும் நிலையில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், ”முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு ஹிந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என்ற காரணத்தினால் அவரை மக்கள் வீட்டில் உட்கார வைத்து விட்டார்கள். அனைவரும் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துகள் கூற வேண்டும்.

தமிழக முதல்வர் வெளிநாட்டில் தொழில் முனைவோரைச் சந்தித்து முதலீடுகளை ஈர்த்து வருவதாக செய்திகளின் மூலம் தெரியவருகிறது. ஆனால் தொழில்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட யாரும் முதல்வருடன் வெளிநாடு செல்லவில்லை.

முதல்வர் உண்மையில் தொழில் முனைவோரை சந்திக்கிறாரா, முதலீடுகளை ஈர்க்கிறாரா என்பது குறித்து வரும் நாட்களில் தெரியவரும். முதல்வர் ஏன் வெளிநாடு சென்றுள்ளார் என்பது குறித்து தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

அரசாங்கத்தின் பிரதிநிதியாக வெளிநாடு சென்றுள்ள முதல்வர், தனது பயணத்தில் யார் யாரைச் சந்திக்கிறார், தமிழகத்திற்கு என்ன முதலீடுகள் வருகின்றன என்பதை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ரேஸ் போட்டியை முதல்வர் தொடங்கி வைத்தது நல்ல விஷயமே. தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித் ரேசில் கலந்து கொண்டதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “திமுக மக்களையும் பெண்களையும் மதிப்பவர்கள் இல்லை. திமுகவின் பல பேச்சாளர்களுக்கு பெண்களை அவமதிப்பு செய்வதுதான் வாடிக்கையாகவே உள்ளது.

வருகிற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்தல் பணிகளை மேற்கொள்வோம்.

இடதுசாரிகள் ஒரு புறம் திமுக அரசுக்கு ஆதரவு அளித்துக்கொண்டு, மறுபுறம் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது இரட்டை நிலைப்பாடு.

திமுக உடைந்துவிட்டது. பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக இருக்கிறோம். இடைத்தேர்தலில் கூட்டணியாக இணைந்து செயல்படுவோம்” என்று குறிப்பிட்டார்.

Summary

Union Minister of State L. Murugan has stated that Chief Minister Vijay must explain his foreign trip to the public.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER