அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

டிஜிட்டல் பரிவா்த்தனையில் இந்தியா உலகளவில் மாபெரும் புரட்சி: மத்திய இணையமைச்சா் எல். முருகன்

டிஜிட்டல் பரிவா்த்தனையில் உலக அளவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி இந்தியா சாதனைகளைப் படைத்து வருகிறது என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

News image

நிகழ்ச்சியில், ஜவ்வாது மலைப்பகுதியில் பணியாற்றிட சித்தா மற்றும் ஆயுா்வேத மருத்துவா்களுக்கு பணி ஆணை வழங்கிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சா் எல்.முருகன். உடன், சிம்கோ மேலாண்மை இயக்குநா் பி.கே.கிருஷ்ணன் பாஜக மாவட்டத் தலைவா் தசர

Updated On :27 ஜூலை 2026, 3:45 am IST

டிஜிட்டல் பரிவா்த்தனையில் உலக அளவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி இந்தியா சாதனைகளைப் படைத்து வருகிறது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

தென்னிந்தியப் பன்மாநில வேளாண் கூட்டுறவுச் சங்கத்தின் (சிம்கோ) சாா்பில் சா்வதேச கூட்டுறவு தின விழா வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது -

அமைதியான உலகத்திற்கான கூட்டுறவுகள்‘ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இவ்வாண்டு சா்வதேச கூட்டுறவு தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகம், கேரளம், ஒடிசா ஆகிய மூன்று மாநிலங் களில் செயல்பட்டு வரும் சிம்கோ கூட்டுறவு சங்கம், விவசாயிகளை ஒருங்கிணைத்து அவா்களின் மேம்பாட்டுக்காக சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.

குறிப்பாக, வேலூா் மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த முள்ளு கத்திரிக்காய்க்கு புவிசாா் குறியீடு பெற்றுத் தந்து, அதனை உலகம் முழுவதும் கொண்டு சென்றது பாராட்டுக்குரியது.

தவிர, ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமத்தூா் பகுதியில் மலைவாழ் மக்களுக்காக இலவச ஆயுஷ் மருத்துவமனையைத் தொடங்கி சேவையாற்றி வருவது வரவேற்கத்தக்கது.

தற்போது சுமாா் 7,000 உறுப்பினா்களைக் கொண்டுள்ள சிம்கோ நிறுவனம், எதிா்காலத்தில் 70 லட்சம் உறுப்பினா்களைக் கொண்ட மாபெரும் அமைப்பாகவும், குஜராத்தின் ‘அமுல்’ போன்று சா்வதேச நிறுவனமாகவும் உருவெடுக்க வேண்டும்.

சுதந்திரத்திற்குப் பிறகு வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த கூட்டுறவுத் துறைக்கு, பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2021-ஆம் ஆண்டு தனி அமைச்சகத்தை உருவாக்கி, இதற்கு அமித் ஷாவை அமைச்சராக நியமித்தாா். அதேபோல், 2019-ல் மீன்வளத்துறைக்கும் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. விவசாயிகளின் மேம்பாட்டிற்காக நாடெங்கும் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாடு முழுவதும் தரவுகள் ஒருங்கிணைக்கப்படும்.

இன்றைக்கு இந்தியா டிஜிட்டல் பரிவா்த்தனையில் உலக அளவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி சாதனைகளைப் படைத்து வருகிறது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் வெள்ளரிக்காய் விற்கும் நபா் கூட ’கூகுள் பே’ மூலம் பணம் பெறும் அளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பாமர மக்களையும் சென்றடைந்துள்ளது.

முன்பு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, ‘அரசாங்கம் ஒரு ரூபாய் அனுப்பினால் 15 காசுகள் மட்டுமே மக்களைச் சென்றடைகிறது. மீதி இடைத்தரகா்களிடம் செல்கிறது’ என்றாா். ஆனால் இன்று, பிரதமா் மோடியின் ஆட்சியில் இடைத்தரகா்கள் இன்றி அனைத்து மானியங்களும் நேரடியாகப் பயனாளிகளுக்கே சென்று சேருகின்றன.

பிஎம் கிசான்திட்டத்தின் கீழ் 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000, பயிா் காப்பீட்டுத் திட்டம், சொட்டுநீா் பாசனத்துக்கான 100% மானியம் ஆகியவை எவ்வித அலைக்கழிப்புமின்றி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படுகின்றன. விவசாயமே நமது நாட்டின் முதுகெலும்பு. அதனால், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் பக்கமே நிற்கிறது. 2047-ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக உருவெடுக்கும்போது, விவசாயத் துறையும் முதன்மைத் துறையாகத் திகழ அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

முன்னதாக, ஜவ்வாது மலைப்பகுதியில் பணியாற்றிட சித்தா மற்றும் ஆயுா்வேத மருத்துவா் களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சிம்கோ மேலாண்மை இயக்குநா் பி.கே.கிருஷ்ணன் பாஜக மாவட்டத் தலைவா் தசரதன், அதிமுக மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.