எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்றுமுதல் தொடக்கம் விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

செல்போன் கொண்டு செல்ல தடை! மருதமலை முருகன் கோயிலும் அமல்!!

மருதமலை முருகன் கோயிலும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருதமலை முருகன் கோயில்

மருதமலை முருகன் கோயில் - video grab

Updated On :

தமிழகம் முழுவதும் கோயில்களுக்குள் ரீல்ஸ் எடுப்பதைத் தடுக்க, ரீல்ஸ் எடுக்காத பக்தர்களும் பாதிக்கப்படும் வகையில், கோயில்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்களில், செல்போன்களை வெளியில் பக்தர்கள் வைத்துச் சென்றுவிட்டும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கோவையில் அமைந்துள்ள, பேரூர் வட்டம், மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிலும் செப். 1 முதல் செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

01.09.2026 முதல் திருக்கோயில் வளாகத்திற்குள் கைப்பேசி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கைப்பேசி பாதுகாப்பு மையம் திருக்கோயில் படிப்பாதையில், மலை ஏறிச் செல்பவர்களுக்கும், அடிவாரத்திலும் மற்றும் மலைக்கு மேல் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்களது கைப்பேசியினை கைப்பேசி பாதுகாப்பு மையத்தில், ரூ.5/- கட்டணம் செலுத்தி பாதுகாப்பாக வைக்கும் வகையில் திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆனால், கோயிலுக்குள் செல்போன் தடை செய்யப்படுவதால், பக்தர்கள் கோயிலுக்குள் இருக்கும் சில கட்டணச் சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் போகிறது. சிறப்பு தரிசன வரிசையில் செல்ல வேண்டும் என்றால் முடியாது, பிரசாதங்களை வாங்கும்போது பணமில்லாமல் இருந்தால் வாங்க முடியாத நிலை ஏற்படுவதாக பக்தர்கள் அதிருப்தி அடைந்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.