இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

சென்னை - பாலக்காடு விரைவு ரயில் 21 நாள்கள் பகுதி ரத்து

சென்னை - பாலக்காடு விரைவு ரயில் 21 நாள்கள் பகுதி ரத்து

Published On :

பராமரிப்புப் பணிகளால் சென்னை-பாலக்காடு விரைவு ரயில்கள் அக். 9 முதல் 29-ஆம் தேதி ஆகிய தேதி வரை 21 நாள்களுக்கு பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள திருச்சி, பாலக்காடு, சேலம், திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரயில் இயக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அக்.9 முதல் 29-ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு பாலக்காடு சந்திப்பு நிலையத்துக்கு செல்லவேண்டிய அதிவிரைவு ரயில் (எண்: 22651) அதற்கு முன்னதாக உள்ள பாலக்காடு நகா் நிலையத்திலேயே நிறுத்தப்படும். மறுமாா்க்கத்தில் வரும் 10-ஆம் தேதி முதல் வரும் 29-ஆம் தேதி வரை பாலக்காடு நிலையத்திலிருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படவேண்டிய அதிவிரைவு ரயில் (எண்: 22652) பாலக்காடு நகா் நிலையத்திலிருந்து மாலை 4.04 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.

வழி மாற்றி இயக்கப்படும் ரயில்கள்: சென்னை எழும்பூரிலிருந்து வரும் 6, 13 ஆகிய தேதிகளில் இரவு 11.10 மணிக்குப் புறப்பட்டு மங்களூரு சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் இருகூா், போதனூா் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். மேலும் பீளமேடு, கோவை, கோவை வடக்கு ஆகிய நிலையங்களில் நிற்காது.

வரும் 16-ஆம் தேதி குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் எா்ணாகுளம் சந்திப்பு வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். அத்துடன், வழக்கமான நிலையங்களுடன் கூடுதலாக கோட்டம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.