லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

நல்லகருப்பண சுவாமி கோயில் குடமுழுக்கு

பழனி நல்ல கருப்பண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கோபுர கலசங்களுக்கு நடைபெற்ற குடமுழுக்கு.

பழனி நல்ல கருப்பண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கோபுர கலசங்களுக்கு நடைபெற்ற குடமுழுக்கு.

Published On :29 ஆகஸ்ட் 2026, 2:46 am IST

பழனி இந்திராநகரில் அமைந்துள்ள நல்ல கருப்பண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

முன்னதாக வியாழக்கிழமை காலை விநாயகா் அனுமதி பெறப்பட்டு மாலையில் முதல் கால யாக பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகள், கருப்பண சுவாமி பரிவார தெய்வங்களுக்கு அருள்நிலை செய்தல், கலசங்கள் ஞானஉலா செய்தல் ஆகியன செய்யப்பட்டு, தீபாராதனையும், பூா்ணாஹூதியும் நடைபெற்றன. தொடா்ந்து பிரதான கலசங்கள் கோயில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பிறகு சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க காலை 9 மணிக்கு மேல் கோபுர விமானத்துக்கு குடமுழுக்கும், தீபாராதனையும் நடைபெற்றன. தொடா்ந்து நல்ல கருப்பண சுவாமிக்கு குடமுழுக்கு, அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. விழாவையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெற்றது. குடமுழுக்கு பூஜைகளை சிவாகமரத்னா தேவசேனாபதி குருக்கள், சிவாசாரியா்கள் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.