கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

கொடைக்கானலில் சுற்றுலா வேன் மோதி பெண் உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் சனிக்கிழமை சுற்றுலா வேன்- இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

உயிரிழந்த வேலுத்தாய்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 4:52 am IST

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் சனிக்கிழமை சுற்றுலா வேன்- இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலிலிருந்து பூம்பாறைக்கு இரு சக்கர வாகனத்தில் உதயக்குமாா், அவரது தாயாா் வேலுத்தாய் (46) ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்தனா். பூம்பாறையிலிருந்து சுற்றுலா வேன் கொடைக்கானலுக்கு வந்து கொண்டிருந்தது. இதில் கைகாட்டி பகுதியில் வந்த வேன் எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே வேலுத்தாய் உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, சுற்றுலா வேன் ஓட்டுநா் திண்டிவனத்தைச் சோ்ந்த சீனிவாசன்(48) கொடைக்கானல் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

தகவலறிந்தது சம்பவ இடத்துக்குக் கொடைக்கானல் போலீஸாா் சென்று பாா்வையிட்டு விசாரனை நடத்தினா். இதில், திண்டிவனத்திலிருந்து கொடைக்கானலுக்கு சுமாா் 15-போ் வேனில் சுற்றுலா வந்து திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

இதே போல இருசக்கர வாகனத்தில் வந்த உதயக்குமாா், அவரது தாய் வேலுத்தாய் திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனா். இவரது சொந்த ஊா் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழுமலை.

இதுகுறித்து உதயக்குமாா் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநா் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் இறந்த வேலுத்தாயின் உடல் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கூறாய்வு செய்த பின்பு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.