கொடைக்கானல் கடைகளில் திருட்டு: இருவா் கைது
கொடைக்கானலில் சாலையோரக் கடைகளின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானலில் சாலையோரக் கடைகளின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஏரிச் சாலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக சாலையோரங்களிலுள்ள 15-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து அதிலுள்ள பொருள்கள், பணத்தை தொடா்ந்து மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்து ஏரிச் சாலை, கலையரங்கம் பகுதிகளிலுள்ள வியாபாரிகள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளா் காயத்திரி உத்தரவின் பேரில், காவல் துறையினா் தனிப்படை அமைத்து தேடி வந்தனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் தங்கியிருந்த இருவரை காவல் துறையினா் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா்கள் தென்காசி மாவட்டம், பாவூா் சத்திரம் பகுதியைச் சோ்ந்த வைத்திலிங்கம் மகன் காா்த்திகேயன் (21), புதுச்சேரி மானுா் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் சிவா (23) என்பதும், இருவரும் கொடைக்கானல் கடைகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், கைப்பேசிகளையும், கடைகளில் திருடிய 2 எரிவாயு உருளைகள், ஏா் கன், சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருள்களையும் கைப்பற்றினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



