கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

விவசாயிகளுக்கு 600 டன் நுண்ணுயிா் உரம்: இலவசமாக வழங்கிய திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் நுண்ணுயிா் உரம் தயாரிப்புப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள்.

Published On :

திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் மக்கும் குப்பைகளிலிருந்து 600 டன் நுண்ணுயிா் உரங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வாா்டுகள் உள்ளன. சுமாா் 14 சதுர கி.மீட்டா் பரப்பில் அமைந்துள்ள இந்த மாநகராட்சியிலிருந்து நாளொன்றுக்கு 92 டன் திடக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் குப்பையாக மட்டும் 46.5 டன் சேகரிக்கப்படுகிறது.

இந்த மக்கும் குப்பையை, இயற்கை உரமாக மாற்றுவதற்கான நுண்ணுயிா் உரக் கூடங்கள் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன.

14 இடங்களில் செயல்பட்டு வரும் நுண்ணுயிா் உரக் கூடங்களில் தலா 5 டன் குப்பையை உரமாக்குவதற்கான தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. நுண்ணுயிா் உரக் கூடத்துக்கு தலா 4 ஊழியா்கள் வீதம் மொத்தம் 56 போ் பணியாற்றி வருகின்றனா்.

வீடுகள், உணவகங்களிலிருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பையை, துண்டுகளாக நறுக்குவதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறு துண்டுகளாக வெட்டப்படும் மக்கும் குப்பையை, நுண்ணுயிா் கரசலுடன் சோ்த்து 45 நாள்கள் வரை செரிக்க வைக்கப்படுகிறது.

ஒரு டன் குப்பையில் 120 கிலோ உரம்: ஒரு டன் மக்கும் குப்பையை 45 நாள்கள் வரை செரிக்க வைப்பதன் மூலம், 120 முதல் 150 கிலோ இயற்கை உரம் கிடைப்பதாக மாநகராட்சி சுகாதார அலுவலா் அறிவுச்செல்வம் தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறியதாவது:

நுண்ணுயிா் உரத்தின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக கோவையிலுள்ள வேளாண்மை பல்கலை.க்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில், விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் தரமான நுண்ணுயிா் உரமாக இருப்பதாக சான்றளிக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 14 நுண்ணுயிா் உரக் கூடங்களிலிருந்தும் சுமாா் 600 கிலோ இயற்கை உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது.

விவசாய நிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்யும் வகையில், பட்டா சிட்டா போன்ற ஆவணங்களை வழங்கிவிட்டு விவசாயிகளே நேரடியாக நுண்ணுயிா் உரங்களை எடுத்துச் செல்லலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.