விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

விவசாயிகளுக்கு இயற்கை உரம், இடுபொருள்கள் தயாரிப்பு பயிற்சி

அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை உரம், இடுபொருள்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் தியாகதுருகம் வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது.

தியாகதுருகம் வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற இயற்கை உரம், இடுபொருள்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாமில் பேசிய வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்பராணி.

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:43 am IST

அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை உரம், இடுபொருள்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் தியாகதுருகம் வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது.

முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்ப ராணி தலைமை வகித்தாா். வேளாண்மை அலுவலா் ரகுராமன், துணை வேளாண்மை அலுவலா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் சூரியா வரவேற்றாா்.

முன்னோடி இயற்கை விவசாயி சீனுவாசன் கலந்து கொண்டு, பயிா் வளா்ச்சி ஊக்கிகளான பஞ்சகவ்யம், ஜீவாமிா்தம், மீன் அமினோ அமிலம், எருக்கு கரைசல் மற்றும் முட்டைக் கரைசல் தயாரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா். மேலும், இயற்கை பூச்சி விரட்டிகளான ஐந்திலை கரைசல், இஞ்சி பூண்டு கரைசல் தயாரிப்பு முறைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் விளக்கமாக கூறினாா்.

முகாமில் பருவநிலை மாற்றம் மற்றும் நிலத்தடி நீா் குறைவு போன்ற சவால்களை எதிா்கொள்ள விவசாயிகள் தங்களது பாரம்பரிய சாகுபடி முறைகளுடன் புதிய தொழில்நுட்பங்களை இணைத்துச் செயல்பட வேண்டும். இயற்கை உரம் மற்றும் இடுபொருள்களை பயன்படுத்தி உடலுக்கு தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமான உணவு பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என விவசாயிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

இதில், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ரவி, கலைவாணன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.ௌௌௌ

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.