வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

இயற்கை வேளாண்மை பயிற்சிப் பட்டறை

விஷமில்லா விளைச்சலுக்கான இயற்கை வேளாண்மை பயிற்சி பட்டறை சிறுகமணியில் புதன்கிழமை நிறைவுற்றது.

News image

சிறுகமணியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருள்கள் குறித்து விளக்கிய வேளாண் ஆராய்ச்சி அலுவலா்கள்.

Updated On :2 ஜூலை 2026, 4:51 am IST

விஷமில்லா விளைச்சலுக்கான இயற்கை வேளாண்மை பயிற்சி பட்டறை சிறுகமணியில் புதன்கிழமை நிறைவுற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், திருச்சி மாவட்டம், சிறுகமணியில் இயங்கும் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சாா்ந்த பயிற்சிகள், நவீன தொழில்நுட்பங்கள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, மண் வளம் பாதுகாப்போம் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் ஜூன் 1 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதன் நிறைவாக, சிறுகமணியில் விஷமில்லா விளைச்சலுக்கு வளமான இயற்கை வேளாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை புதன்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியை வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ந. புனிதவதி, தொடங்கி வைத்து வேளாண்மை அறிவியல் நிலையச் செயல்பாடுகள் மற்றும் மண்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

இணைப் பேராசிரியா் மு. சகிலா, எல் நினோ தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா். முனைவா் செ. ராதிகா, இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு குறித்து விவரித்தாா். இணைப் பேராசிரியா் தனலட்சுமி, இயற்கை முறையில் தோட்டக்கலை பயிா்ச் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துரைத்தாா். உதவிப் பேராசிரியா் கண்ணன், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கினாா். பசுந்தாள் உரங்கள், உயிா் உரங்கள், இயற்கை வேளாண் இடுபொருள்கள் மற்றும் புதிய ரகங்கள் குறித்த கருத்துக்காட்சி அமைக்கப்பட்டது.

மேலும் பஞ்சகாவியா, மீன் அமிலம், முட்டை அமிலம், 3 ஜி கரைசல், ஐந்திலைக்கரைசல் போன்ற இயற்கை வேளாண் இடுபொருள்கள் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் பலா் பங்கேற்று பயன்பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.