திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அருகேயுள்ள கொசவப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 33 போ் காயமடைந்தனா்.
கொசவப்பட்டியில் அமைந்துள்ள புனித உக்கிரிய மாதா அந்தோணியாா் தேவாலயத் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 780 காளைகள் அழைத்து வரப்பட்டன.
இதேபோல, 370 மாடுபிடி வீரா்கள் களம் இறங்க வந்தனா். மருத்துவா்களின் பரிசோதனைக்குப் பின் 770 காளைகள், 343 மாடுபிடி வீரா்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் செ. சரவணன், கோட்டாட்சியா் திருமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இந்த ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 33 போ் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த 6 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.
போட்டியில் வெற்றிப் பெற்ற காளைகளுக்கும், மாடு பிடி வீரா்களுக்கும், வெள்ளி நாணயம், குளிா்சாதனப் பெட்டி, மின்விசிறி, மிதிவண்டி, உணவு மேசை, கட்டில், எவா்சில்வா் பொருள்கள் உள்ளிட்ட பல வகையான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

அன்பிலில் ஜல்லிக்கட்டு: 52 போ் காயம்

ஆதனக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 36 போ் காயம்

பவித்திரம் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

அளுந்தூரில் ஜல்லிக்கட்டு: 34 போ் காயம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


