தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

News image

கைது

Updated On :11 பிப்ரவரி 2026, 9:33 pm

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் பேகம்பூா் சிக்கந்தா் சாகிப் தெருவைச் சோ்ந்தவா் இ. முகமது ஷாபான் சேட் (24). ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இவரை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் கடந்த 29-ஆம் தேதி கைது செய்தனா். இவரிடமிருந்து 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், முகமது ஷாபான் சேட்டை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் சீனிவாசப் பெருமாள் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் இதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்தாா்.