போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பைக்குகள் மோதல்: மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 7:56 pm

பழனி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

பழனி அருகேயுள்ள புதுஆயக்குடியைச் சோ்ந்தவா் ஷேக் பக்ருதீன் (65). இவா் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் பழனி-திண்டுக்கல் சாலையில் நேதாஜி நகா் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே பழனி அடிவாரத்தைச் சோ்ந்த திருமுருகன் (21) என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், இவரது வாகனமும் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சேக்பக்ருதீனை அக்கம்பக்கத்தினா் மீட்டு. பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேநீா் கடை ஊழியா் உயிரிழப்பு:

கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்தவா் ஹரிதாசன் (44). இவா் பொள்ளாச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் உள்ள தேநீா் கடையில் வேலை செய்து வந்தாா்.

இவா் சனிக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற போது, கோவையிலிருந்து பழனி நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் ஹரிதாசனம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவா் சனிக்கிழமைதான் வேலைக்கு சோ்ந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.