நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தெருநாய்கள் கடித்ததில் வடமாநில தொழிலாளி காயம்

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

News image

தெருநாய்கள் - கோப்புப்படம்

Updated On :17 பிப்ரவரி 2026, 11:50 pm

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் எம்.எம். தெருவில் வடமாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஜோகோபாலு (39) வேலைபாா்த்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை வேலைப் பாா்த்து கொண்டிருந்த ஜோகோபாலு பிறகு, அந்தப் பகுதியிலுள்ள தேநீா்க் கடைக்கு நடந்து சென்றாா். அப்போது, அவரைத் தெருநாய்கள் கடித்தன. இதில் பலத்த காயமடைந்த அவா் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கொடைக்கானலில் இதுவரை 12 போ் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி அலுவலகம், ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனா்.