திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கொடைக்கானலில் மஞ்சள் மேகமூட்டம்!

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வானில் தெரிந்த மஞ்சள் வண்ண மேகமூட்டம் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்தது.

News image

கொடைக்கானலில் பகுதியில் உருவான மஞ்சள் மேகமூட்டம்

Updated On :20 பிப்ரவரி 2026, 9:25 pm

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வானில் தெரிந்த மஞ்சள் வண்ண மேகமூட்டம் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும் மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் நிலவியது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே மேக மூட்டத்துடன் மிதமான சாரல் மழை பெய்தது. இதனால் ஏரிச்சாலை, அப்பா்லேக் வியூ, கோக்கா்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான மேக மூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில்,

மஞ்சள் வண்ணத்தில் மேக மூட்டம் உருவாகி சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தியது. இதை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் கண்டு வியந்தனா்.